தீபாவளி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் கோயில்களில் பட்டாசு வெடிக்கும் சம்பிரதாய நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனையடுத்து அம்மன் முன்னிலையில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல, கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுடன் சுவாமி பட்டாசு வெடிக்கும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது.
அதில் கோயில் வளாகத்திலேயே பட்டாசுகளை வெடித்து கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் தீபாவளியை கொண்டாடினர். இந்த நிகழ்வின்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.