நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த சர்தார் வல்லபாய் படேலின் ஆற்றிய பங்களிப்பு இணையற்றது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது மற்றும் எப்போதும் போற்றப்படும். இன்றும் ஒவ்வொரு நாளும் ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவோம்.
இதே போல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர்கள் சர்பானந்த்சன்வால், சிரான் பாஸ்வான் ஆகியோருக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்ர்.