திருச்சி மாநகர் முழுவதும் குவிந்துள்ள ஆயிரத்து 100 டன் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் காலை, மாலை வேளைகளில் பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடினர்.
இந்நிலையில், திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
மாநகராட்சி முழுவதும் சுமார் ஆயிரத்து 100 டன் குப்பைகள் குவிந்து கிடக்கும் நிலையில் அவற்றை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.