தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் முழுவதும் தேசிய கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
தீபங்கள் ஏற்றப்பட்டு காணும் திசையெங்கும் வண்ணமயமாக காட்சியளித்தது. மேலும் அப்பகுதி முழுவதும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. தேசிய கொடி ஏற்ற முடியாத சூழல் நிலவிய ஜம்மு காஷ்மீரின் லால் செளக் பகுதியில் இன்று அனுமன் பாடல் ஒலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.