உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கவுள்ள நிலையில், விரதமிருக்கும் பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி 7 நாள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மேலும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி கடற்கரையில் நடைபெறவுள்ளது.
ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் கோயில் வளாகத்தில் 7 நாட்கள் தங்கி, விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை தொடங்கவுள்ள நிலையில், விரதமிருக்கும் பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.