மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரத்து 39 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பந்தல் கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆயிரத்து 39-வது சதய விழா வரும் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நடந்த பந்தல் கால் நடும் விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.