விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, அருவி ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தினசரி சுவாமி தரிசனம் செய்வதற்கும் குளிப்பதற்கும் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், விடுமுறை நாள் என்பதால் ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது கனமழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கோயிலில் இருந்தவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி சிக்கியிருந்த 150 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.