சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹர்ஷத் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி நேற்று முன் தினம் வீட்டின் குளியலறையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர், யாரிடமும் கூறாமல், நேற்று பிற்பகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.