இமாச்சலப்பிரதேச மாநிலம் ஷிம்லா அருகே கல்லெறி திருவிழா கோலாகலாமக நடைபெற்றது.
ஷிம்லா அருகே தாமி பகுதியில் ஆண்டுதோறும் கல்லெறி திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டு கல்லெறி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். காளிகோயிலுக்கு ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஒரு புறம் நின்றுக்கொண்டனர்.
மறு புறம் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளும் நின்றுக்கொண்டு கற்களை மாறி மாறி எரிந்து கொண்டனர்.
இதில் பொதுமக்களில் ஒருவரான சுரிந்தர் என்பவர் முதலில் காயமடைந்தார், அப்போது அவரின் ரத்தத்தை பிடித்த பொதுமக்கள் காளிதேவிக்கு திலகமிட்டு வழிபாடு நடத்தினர்.