திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கொட்டிதீர்த்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி ,நாலுமுக்கு, குதிரை வெட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. எனவே சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி அருவியில் குளிக்கதடை விதிப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஆனால், பேச்சிப்பாறை அணையில் அதிக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், அருவியில் கொட்டும் தண்ணீரை கம்பி வேலிக்குள் நின்று ரசித்தனர். அத்துடன், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.