கும்பகோணம் அருகே உள்ள மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் ஐப்பசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநறையூரில் மங்கள சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் சனீஸ்வர பகவான் மந்தா தேவி, ஜேஷ்டா தேவி என இரு மனைவிகளுடனும், மாந்தி, குளிகன் என இரு குழந்தைகளுடன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
இந்நிலையில் இந்த கோயிலில் ஐப்பசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கவசத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவானை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.