உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து கனடா அமைச்சர் விமர்சனம் தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஆபத்தான மற்றும் ஆதாரமற்ற குறிப்புகளை டேவிட் மோரிசன் முன்வைப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால், கனடாவின் உயர் அதிகாரிகள் இந்தியாவை வேண்டுமென்றே இழிவுபடுத்துவதாக கூறினார்.
கனடா அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களில் ஆதாரமற்ற யூகங்களை கசிய விடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக கனடா தூதரிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.