மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், உற்சவர் சுப்பிரமணியசுவாமி மற்றும் தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.
மேலும், உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்னர், கந்த சஷ்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு திணை, தேன், எலுமிச்சை சாறு மற்றும் பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.