தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மாவட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் வரும் 7 அல்லது 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வலுப்பெற்று வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.