குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாக்கள் - ஆளுநர் மாளிகை விளக்கம்!
Sep 17, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா முதல்முறையாக குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி,   உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் நிலைக்கொண்டும்இ நமது மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 09 செப்டம்பர் 2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (கோயம்புத்தூர்) பட்டமளிப்பு விழா தொடங்கி,  19 அரசுப் பல்கலைக்கழகங்களின்  பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்  மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

ஆளுநர்- 7,918 மாணவர்களுக்கு நேரில் (In-Person) பட்டங்களை வழங்கியும், 8,20,072 (இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் மற்றும் அறிவியல் முனைவர் பட்டங்கள் உட்பட) மாணவர்களுக்கு பட்டங்களை ஆளில்லா நிலையில் (In-Absentia) வழங்கியும் உள்ளார்.

ஆக 19 அரசுப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 8,27,990 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பேரிலும், அப்பாட திட்டங்களின் காலமுறையைக் கருத்தில் கொண்டும் அதன் பட்டமளிப்பு விழாவை வருகின்ற நவம்பர் 20, 2024 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிச் சூழலில், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பட்டமளித்தல் உள்ளிட்ட குறித்த காலத்திலான கல்வி செயல்பாடுகள், மாணவர்கள் மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் அவசியம்.

இந்த முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், கல்விசார் சிறப்பையும் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் ஒரு கல்வி கலாச்சாரத்தை வளர்த்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது மாணவர்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,ஆளுநர் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயலூக்கமான அணுகுமுறை மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பட்டப்படிப்புச் சான்றிதழ்களை உடனடியாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது மற்றும் அவர்கள் வாய்ப்புகளைத் தாமதமின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, மாணவர்களை தங்கள் முயற்சிகளில் வெற்றிப் பெற செய்ய மேற்கொண்ட உறுதிப்பாட்டின்படி, 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாதம் 2024 இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: RN RaviGraduation Ceremonytamilnadu governoruniversities in Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

தொடங்கியது குளிர் காலம் – கேதார்நாத் கோயில் மூடல்!

Next Post

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

Related News

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies