ஆந்திராவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் மூச்சுத் திணறலுக்குள்ளான 107 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் நிஜாம்பட்டினத்தில் ராயல்மரைன் என்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் இறாலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஹைப்போ குளோரைட்டுடன், ஹட்ரோ குளோரிக் எனும் மற்றொரு ஆசிட்டை தொழிலாளர்கள் கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் குளோரின் வாயு அதிக அளவில் வெளியேறியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிப்புக்குள்ளான 107 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.