அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஆரம்பத்தில் களமிறங்கிய அதிபர் ஜோ பைடன், திடீரென விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கினார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் கமலா ஹாரிஸ்க்கு 47 சதவீத ஆதரவு இருப்பதாகவும், டிரம்புக்கு 43 சதவீத அதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.