நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 121 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வென்ற நியூசிலாந்து 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.