காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அளித்த பிரதமர் மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்துள்ளார்.
2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது -குறித்து மத்திய மத்திய சுகாதார அமைச்சர் நட்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறியுள்ளதாவது :
“பாராட்டத்தக்க முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளின் விளைவாகும். ஒரு கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.