அமரன் படத்தின் Real Hero : யார் இந்த மேஜர் முகுந்த் ? சிறப்பு பதிவு!
Jan 14, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமரன் படத்தின் Real Hero : யார் இந்த மேஜர் முகுந்த் ? சிறப்பு பதிவு!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. யார் இந்த முகுந்த் வரதராஜன்? விரிவாக பார்க்கலாம்.

2013-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி…

காஷ்மீரில் உள்ள அழகிய ஆப்பிள் தோட்டம் ஒன்றுக்குள் ஆபத்து மறைந்திருந்தது. பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ – முகமதைச் சேர்ந்த ALTAF BABA அங்கு மறைந்திருந்தார். அதையறிந்து இந்திய ராணுவத்தின் 44-ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள் படையணி தீவிரவாதியை பிடிக்க முயன்றது. இருதரப்புக்கும் இடையே துப்பாக்கச் சண்டை…

“கொஞ்சம் காத்திருங்கள்… எதிரியிடம் ஒரே ஒரு புல்லட்தான் இருக்கிறது. அது முடிந்தவுடன் இறங்கலாம்” என்கிறார் மேஜர். ALTAF BABA-வின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டுகளின் எண்ணிக்கையை அவர் கவனித்திருந்தார். எதிரியைப் பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தமது வீரர்களின் பாதுகாப்புக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

அதே சமயம் நாம் இறப்பதற்குள் எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனை பேரை கொன்றுவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தார் ALTAF BABA. அது தெரிந்ததால்தான் தமது அணியை அமைதிப்படுத்தினார் மேஜர். இறுதி குண்டு வெடித்ததும் உள்ளே இறங்கிய நமது வீரர்கள் ALTAF BABA-வை சுட்டுக் கொன்றார்கள்.

ராணுவ தரப்பில் சேதம் ஏற்படாமல் போனதற்கு காரணம் மேஜரின் சமயோசிதமும் வீரத்துடன் கூடிய விவேகமும்தான். துப்பாக்கி குண்டுகள் வெடித்துச் சிதறிய நேரத்திலும் துரிதமாக யோசித்து இந்திய வீரர்களை காப்பாற்றியவர் மேஜர் முகுந்த் வரதராஜன்.

இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வரதராஜனுக்கும் கீதாவுக்கும் மகனாகப் பிறந்தார் முகுந்த்.

B.Com-மும் Journalism-மும் படித்த அவர் தந்தையின் ஆசைக்காக ராணுவத்தில் சேர்ந்தார். இளம்வயதில் ராணுவத்தில் இணைய விரும்பினார் வரதராஜன். ஆனால் அது நடக்கவில்லை. பொதுவாக தங்கள் ஆசைகளுக்காக பெற்றோரை உதறித்தள்ளும் பிள்ளைகளுக்கு மத்தியில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார் முகுந்த்.

சென்னை OFFICERS TRAINING ACADEMY-ல் பயிற்சி பெற்ற அவர், 2006-ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியானார். 2008-ல் கேப்டனாக பதவி உயர்வு பெற்ற முகுந்த், அதற்கு அடுத்த ஆண்டில் தமது காதலி இந்து ரெபேக்கா வர்கீஸை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஐ.நா. சார்பில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையிலும் முகுந்த் இடம்பெற்றிருந்தார். 2012-ஆம் ஆண்டு மேஜராக பதவி உயர்வுபெற்ற அவர், 44-ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள் படையணிக்கு மாற்றப்பட்டார்.

ஒரு ராணுவ வீரராக பல்வேறு சண்டைகளில் பங்கேற்ற முகுந்த் அதன் பரிசாக வீரத்தழும்புகளை உடலில் தாங்கினார். துப்பாக்கிச் சண்டை ஒன்றின்போது முகுந்தின் மீது பாய்ந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனால் அதைப்பற்றி தமது குடும்பத்தினரிடம் அவர் கூறவில்லை.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது சுமைகளை தூக்க முகுந்த் சிரமப்பட்ட பிறகே விஷயம் வீட்டுக்கு தெரியவந்தது. அதே போல் ஒருமுறை கண்ணி வெடியில் காலை வைத்த முகுந்த், சகவீரர்களின் உதவியால் மயிரிழையில் உயிர் தப்பினார். “நான் கண்ணி வெடியில் இருந்தே தப்பியவன், எனக்கு ஆயுசு கெட்டி” என்று அந்த ஆபத்தான தருணத்தைப் பற்றி அப்பாவிடம் ஜாலியாகச் சொன்னவர் முகுந்த்.

போர்க்களத்தை தவிர பிற இடங்களில் மிகவும் உற்சாக இருக்கும் அவர், சக வீரர்களின் பிறந்தநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு கையில் கேக்குடன் சென்று வாழ்த்துச் சொல்வாராம். பார்ப்பதற்கு நடிகர் மாதவன் போல் இருந்ததால் கேம்ப்பில் முகுந்தின் செல்லப் பெயர் ‘MADDY’.

2013-ஆம் ஆண்டு ALTAF BABA-வை சுட்டுக்கொன்ற இடத்தில் இருந்து CODE WORD-களைக் கொண்ட கடிதம் ஒன்றை முகுந்த் கைப்பற்றியிருந்தார். அதை DECODE செய்து பார்த்த போது சோஃபியான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. உடனடியாக ஆபரேஷனுக்கு தயாரானார் மேஜர் முகுந்த்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் ரகசியமாக கண்காணிப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி தீவிரவாதிகள் தங்கியிருக்கும் இடத்துக்கு அவர்களின் முக்கிய COMMANDER ALTAF WANI வரும் செய்தி மேஜருக்கு கிடைக்கிறது. உடனடியாக தமது குழுவோடு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை முற்றுகையிடுகிறார்.

அருகில் இருக்கும் வீடுகளில் பொதுமக்கள் வசிப்பதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக சற்று பொறுமை காக்கிறார். ஆனால் தீவிரவாதிகளுக்கு அந்த பொறுமையெல்லாம் இல்லை. ராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். மக்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு எதிர்தாக்குதல் நடத்தப்படுகிறது.

நேரம் மாலை 5 மணியை தாண்டுகிறது. இருட்டிவிட்டால் தீவிரவாதிகள் தப்பிவிடுவார்கள் என்பதால் விக்ரம் சிங் என்ற வீரரை மட்டும் தம்மோடு அழைத்துக் கொண்டு கையில் AK 47 துப்பாக்கியுடன் தவழ்ந்து தவழ்ந்து தீவிரவாதிகள் இருக்கும் வீட்டை நோக்கி முன்னேறுகிறார் மேஜர் முகுந்த்.

கையெறி குண்டை வீசி ஒரு தீவிரவாதியை பிடித்த இருவரும் மற்றொருவரை நோக்கி முன்னேற முகுந்தின் கண் முன்பே தாடையிலும் கழுத்திலும் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைகிறார் விக்ரம் சிங். நண்பன் துடிதுடித்து இறந்ததை பார்த்த பிறகு மேஜரின் வேகம் அதிகமாகிறது. ALTAF WANI-ஐ பிடித்தே தீருவது என்ற முடிவோடு விரைகிறார்.

எப்போதும் சக வீரர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் முகுந்த் தமது உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. குண்டு வீசப்படும் திசையை நோக்கிச் சென்ற அவர், ALTAF WANI-ஐக் கண்டதும் ஒரு நொடிகூட தாமதிக்காமல் சுட்டு வீழ்த்துகிறார்.

“ALTAF WANI-ஐக் கொன்றுவிட்டோம். ஆனால் விக்ரம் சிங்கும் இறந்துவிட்டார்” என முகாமுக்கு தகவல் சொல்லிவிட்டு தமது குழுவினரை நோக்கி வந்த முகுந்துக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஆனால் அந்த வெற்றிக் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில நொடிகளிலேயே சரிந்து விழுந்தார் முகுந்த்.

தீவிரவாதி ALTAF WANI உடன் நேருக்குநேர் நடந்த சண்டையில் சில குண்டுகள் அவரது உடலில் பாய்ந்திருந்தன. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே வீரமரணம் அடைந்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அந்த வீர மகனின் மறைவுக்கு ஒட்டுமொத்த தேசமே கண்ணீர் சிந்தியது.

2015-ஆம் ஆண்டு வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது முகுந்த வரதராஜனுக்கு வழங்கப்பட்டது. அதை பெறுவதற்காக அவரது மனைவி டெல்லிக்குச் செல்வது போல் தொடங்குகிறது ‘அமரன்’ திரைப்படம். அதைத்தொடர்ந்து இந்துவின் நினைவுகளில் இருந்து விரிகிறது முகுந்த வரதராஜனின் வாழ்க்கை.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். முகுந்தின் வீரத்தையும் பெருமையையும் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கையை படமாக்க ஒப்புக்கொண்டதாக இந்து தெரிவித்தார்.

அவரை பொறுத்தவரை ஒருவகையில் இது தமது கணவருக்கு செலுத்தும் அஞ்சலி. அதே சமயம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றுவதை வழக்கமாகக் கொண்ட தமிழ் மக்கள், ‘அமரன்’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறார்கள்.

Tags: Major. Mukund Varadharajan’SaiPallavikamalhaasanSiva KartikeyanRajkumaramaran
ShareTweetSendShare
Previous Post

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு – மீண்டும் மயங்கி விழுந்த மாணவிகள்!

Next Post

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் – சேலம் அருகே உடல் அடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies