கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோல நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 678 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, அணையில் இருந்து தேக்கடி சுரங்கப்பாதை கதவணை வழியாக விநாடிக்கு 1,100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீருடன் மழைநீரும் சேர்ந்து சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.