கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில் இந்திய தூரதக அதிகாரிகள் முகாமை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியும் அங்குள்ள காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடா காவல்துறையினரின் அலட்சியமே, காலிஸ்தான் ஆதரவாளர்களின் எவ்வித பயமுமின்றி தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என அலோக் குமார் தெரிவித்துள்ளார்.