திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் கந்த சஷ்டி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
இந்த நிலையில், கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசால மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளினர்.
அப்போது, வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது.