ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்டாபுரம் மலைக் கிராமத்தில், தீபாவளி பண்டிகை முடிந்து 3 நாட்களுக்கு பிறகு சாணியடிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இங்குள்ள பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் சாணியடிக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாணத்தை உருண்டைகளாக உருட்டி ஒருவர் மீது ஒருவர் மீது அடித்து உற்சாகமாக கொண்டாடினர். இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.