கனடாவில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இந்து கோயில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் ஆட்சேபம் தெரிவித்த பிரதமர் மோடி, கனடாவில் இந்து கோயில்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல இந்திய தூதர்களை கோழைத்தனமாக அச்சுறுத்த முயற்சிப்பதற்கும் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியாவின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தி விட முடியாது என்று கூறியுள்ள பிரதமர்,
கனடாவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.