வரும் 2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் கடிதம் அனுப்பியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து வரும் 2028-இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலும், 2032-இல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து அதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அனுப்பியுள்ளது.
(NEXT) இதனிடையே, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இரட்டை இலக்கத்தில் நாடுகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தாமஸ் பச் கூறினார். (OUT)