உத்தரபிரதேச மதரஸா சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 பேர் அமர்வு தீர்ப்பளித்தது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 16 ஆயிரம் மதரஸாக்களில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் கல்வி பயில்கின்றனர். இங்கு மதச்சார்பின்மைக்கு எதிராக போதிக்கப்படுவதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உத்தர பிரதேச மதரஸா சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, உத்தர பிரதேச மதரஸா சட்டம் செல்லும் என உத்தரவிட்டனர்.
மேலும், ஃபஸல் மற்றும் கமினி என்ற படிநிலையின் அடிப்படையில் உயர்கல்வி சான்றிதழை மதரஸா வழங்குவது மட்டும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.