கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!
கோவை மாவட்டம் துடியலூர் காலனியில் வசித்து வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் மகளும் உள்ளனர். அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷாவிற்கும், சத்தியமூர்த்தியும் நண்பர்களாக இருந்தனர்.
ரியல் எஸ்டேட் தொடர்பாக பேசுவதற்காக அடிக்கடி சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு வந்த ஹசன் பாதுசா, சத்திய மூர்த்தியின் மனைவி ஆர்த்தியிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்றுள்ளார்.
மேலும் சத்தியமூர்த்தி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்ற ஹசன் பாதுஷா, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு ஆர்த்திக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆர்த்தியிடம் குரான் புத்தகத்தை வழங்கி அதனை கட்டாயம் படிக்க வேண்டும் எனவும், மதம் மாறி தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.
அதனால், சத்தியமூர்த்தி துடியலூரில் தாம் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு ஈரோட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் சொந்த வேலைக்காக துடியலூருக்கு வந்தபோது தன்னை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாகவும், மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும் ஹசன் பாதுஷா மீது காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஹசன் பாதுஷாவை போலீசார் கைது செய்தனர்.