அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர பிரதான கட்சிகள் சார்பில் சுஹாஸ் சுப்ரமணியம், பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் களம் காண்கின்றனர்.வாக்குப் பதிவு தொடங்கியதும் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இ-மெயில் மூலம் வாக்களித்தார்.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.
தேர்தலில் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் இடையே சம பலம் நிலவுவதாக கருத்துக் கணிப்பு வெளியானதால், அதிபர் தேர்தல் முடிவை உலகமே உற்றுநோக்குகிறது.