திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகேயுள்ள விடுதிகளில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கோயிலுக்கு அருகேயுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதிகளில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குளிக்க முடியாததால் கோயில் தரிசனத்துக்கு செல்லாமல் அறையிலேயே பக்தர்கள் முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.