பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்!
Oct 27, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா உடல்நலக்குறைவால் காலமானார்.

பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், போஜ்புரி மொழியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் இருப்பது  கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சாரதா சின்ஹாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டுப்புற கலைஞர் சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் சாரதா சின்ஹா ​​ஜியின் மறைவுஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மைதிலி மற்றும் போஜ்புரி நாட்டுப்புற பாடல்கள் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் பிரபலமாக உள்ளன.

நம்பிக்கையின் பெரிய திருவிழாவான சாத் உடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: pm modi condolenceBhojpuri singer Saratha Sinha passed away
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை!

Next Post

திருச்செந்தூர் சுற்றுலாத்துறை விடுதிகளில் தண்ணீர் இல்லாத அவலம் – பக்தர்கள் அவதி!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies