கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சேதமடைந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
புத்தேரி ஊராட்சி அலுவலக பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் மினி லோடு ஆட்டோவின், முகப்பு கண்ணாடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை சேகரித்து வருவதை நபர் ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டார்.
இதுபோன்ற தகுதியற்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.