குமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக முக்கடல் அணை நிரம்பியது. வடகிழக்கு பருவமனை தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் நாகர்கோவில் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.