அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிய நிலையில் புதன்கிழமை காலை வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையாக 270 எலெக்ட்ரோல் வாக்குகள் பெறவேண்டும்.
இந்நிலையில் பெரும்பான்மைக்குத் தேவையானதை விட அதிகமான எலெக்ட்ரோல் வாக்குகளை டிரம்ப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 228 எலெக்ட்ரோல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.