பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் கிரண் குமார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற இவர், நீலமங்கலா – தசனபுரா இடையேயான 256 M-1 என்ற வழித்தடம் எண் கொண்ட பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்து நடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் கிரண் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இருக்கையில் இருந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனால் பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு மாநகர பேருந்தின் மீது உரசியபடி தாறுமாறாகச் செல்ல, அங்கு வந்த பேருந்தின் நடத்துநர் ஓபலேஷ் விரைந்து செயல்பட்டு பேருந்தை சாதூர்யமாக சாலையோரம் நிறுத்தினார்.
அவரது துரித செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளும் காயங்களின்றி உயிர் தப்பினர்.