சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக வரும் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது. மேலும், அவை பூஜை பொருட்களாக இருந்தாலும் தீயின் ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.