சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பழம்பெரும் இந்திய இயற்பியலாளர் சிவி ராமனின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம். ராமன் விளைவு என்று அழைக்கப்படும் அவரது கண்டுபிடிப்பு ஒளி மற்றும் பொருள் பற்றிய நமது புரிதலில் புரட்சியை ஏற்படுத்தியது. அவரது பாரம்பரியத்தையும் அறிவியலுக்கான பங்களிப்பையும் உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான பிபின் சந்திர பாலை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சுதேசி இயக்கத்திற்கான அவரது அசைக்க முடியாத தேசியவாதம் சுதந்திரத்திற்கான பாதையில் மகத்தானதாக நிரூபிக்கப்பட்டது என கூறியுள்ளார்.