சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தாபெட்டமைன் வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தப்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நைஜீரியாவை சேர்ந்த ஒனுஹா சுக்வு என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.