சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உரம் புதுக்கோட்டை சென்றடைந்தது.
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உள்ளிட்ட ஆயிரத்து 100 மெட்ரிக் டன் உர மூட்டைகள் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இவற்றை லாரிகள் மூலம் ஊருக்குள் அனுப்பி வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.