மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 39 -வது சதய விழா நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்தக்கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு முடி சூட்டப்பட்ட ஐப்பசி சதய நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும் சதய விழா நாளை தொடங்குகிறது. இந்த இரண்டு நாட்களும் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.