அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.
இதில் 301 இடங்களை கைப்பற்றிய டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் பிரசார மேலாளராக இருந்த 69 வயதான சூசி வைல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.