இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக இ பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை மேட்டுப்பாளையத்தில் நுழைவு வாயிலான கல்லார் பகுதியில் இதற்கென தனியாக சோதனை சாவடி ஏற்படுத்தப்பட்டு இ பாஸ் எடுத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்
இந்த நிலையில் அண்மையில் நீதிமன்றம் இ பாஸ் நடைமுறையை அரசு முறையாக பின்பற்றவில்லை என அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இபாஸ் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்லும் வாகனங்களை கல்லார் பகுதியில் சோதனைச் சாவடியில் காலை முதல் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் இருசக்கர வாகன முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களையும் இ_பாஸ் உள்ளதா என காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி இ_பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதித்து வருகின்றனர்
மேலும் அதே இடத்தில் பசுமை வரியும் வசூலித்து வருவதால் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.