நாட்டில் பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாயாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தில், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த விதியும் இல்லாதபோது காங்கிரஸ் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது என விமர்சித்தார்.
ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு வரம்பை குறைத்து இஸ்லாமியர்களுக்கு 10 சதவீதம் வழங்க காங்கிரஸ் விரும்புவதாக குற்றம் சாட்டிய அமித்ஷா, நாட்டில் பாஜக இருக்கும் வரை சிறுபான்மையினர் இடஒதுக்கீடு கிடைக்காது என்று உறுதிபடத் தெரிவித்தார்.