10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக இருந்து வருவதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நத்தேத் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருவதாகவும், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானின் அந்த செயல்திட்டத்தை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்குள் காங்கிரஸ் எதிரொலிக்க தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர், இத்தகைய செயல்களில் ஈடுபடும் காங்கிரசை தேர்தலில் தண்டீப்பீர்களா மாட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சாதி அடிப்படையில் பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், இதற்கு பலியாகாமல் மக்கள் காங்கிரசிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.