இந்திய சினிமாவில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இருக்கக் கூடாதென மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழா குறித்து, சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய சினிமாவில் வடக்கு, தெற்கு என்ற பேதம் இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் கடும் தணிக்கை தேவை என்று தெரிவித்தார். காஷ்மீரில் இருக்கும் உண்மை கருத்தை தான் அமரன் படத்தில் காண்பித்து உள்ளனர் என்று கூறினார்.
மேலும் நாட்டுப் பற்று இருக்கக் கூடிய படத்தினை அனைவரும் வரவேற்று கொண்டிருப்பதாக கூறிய எல்.முருகன், திரைப்படங்களில் பிரிவினை கருத்துக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.