மேட்டுப்பாளையம் அருகே ஆமை வேகத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், 80அடி தண்ணீரில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தவயல், மொக்கை மேடு, உளியூர், ஆலூர் போன்ற கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் அன்றாட தேவைகளுக்கு, காந்தையாற்றை கடந்துதான் மேட்டுப்பாளையம் போன்ற நகரங்களுக்கு செல்ல முடியும். இந்நிலையில், லிங்காபுரம் மற்றும் காந்த வயல் இடையே இரு கிராமங்களை இணைக்கும் வகையில் காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மேம்பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பரிசல்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.