தமிழக அரசின் உத்தரவையடுத்து வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்றுமுதல் 18ம் தேதி வரை ஆயிரத்து 830 மில்லியன் கன அடியும், 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை 418 மில்லியன் கன அடியும் தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டது.