ஹீரோ, வில்லன், காமெடி என கலக்கிய டெல்லி கணேஷ் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹீரோ, வில்லன், காமெடி என கலக்கிய டெல்லி கணேஷ் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 10, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை உள்வாங்கி மக்கள் ரசிக்கும்படியாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்கள் ஆபூர்வம். அத்தகையவர்களில் தனிஇடம் பிடித்தவர்
டெல்லி கணேஷ். ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கணக்கச்சிதமாக பொருந்தி நடிப்பது அவரின் சிறப்பம்சம்.

திருநெல்வேலியில் உள்ள பத்தமடையில் பிறந்து வளர்ந்த டெல்லி கணேஷ், தொடக்கத்தில் இந்திய வான்படையில் பணியாற்றி வந்தார். நடிப்பில் தீரா காதல் கொண்டிருந்த அவரை, பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

1981ம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ், அதிகமாக நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். திரைப்படங்களை போலவே நாடகத்துறையிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘தில்லி’ நாடகக் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்து வந்தார். இதன் காரணமாக டெல்லி என்ற அடைமொழி அவரது பெயருடன் இணைந்துகொண்டது.

கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதவை. மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து படங்களும் காலத்தால் அழியாதவை.

அதேபோல ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பொல்லாதவன், படிக்காதவன், ராகவேந்திரா உள்ளிட்ட படங்களும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படங்களாக அமைந்தன.

1990-களில் டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களாக இருந்தன. நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல வில்லனாகவும் சில படங்களில் மிரட்டியுள்ளார் டெல்லி கணேஷ். ‘சிதம்பர ரகசியம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகியவை அந்த பட்டியலில் முக்கியமானவை

2000ஆம் ஆண்டுக்கு பிறகு தந்தை, தாத்தா போன்ற வேடங்களில் அவர் அதிகம் நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தான் உள்ள இடத்தை கலகலவென வைத்திருப்பார் டெல்லி கணேஷ்.

80 வயதானபோதும் நடிப்பதில் இருந்து ஓய்வுபெற அவருக்கு மனம் வரவில்லை. ஆகவே, திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். இறுதியாக அரண்மனை 4 படத்தில் அவர் நடித்திருந்தார்.

தற்போது இயற்கை அவருக்கு ஓய்வளித்துள்ளது. இருப்பினும் அவரது திரைப்படங்களும், அவரது தனித்துவமான நடிப்பும் தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்கும்..

 

Tags: PaddamaitaEngamma Maharanidelhi ganesh passed awayactor delhi ganeshTamil film industry
ShareTweetSendShare
Previous Post

200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி மக்களை மூளைச்சலவை செய்யும் திமுக – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Next Post

கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies