மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்தாக, மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சங்கல்ப் பத்ரா எனும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அமித்ஷா, மகாராஷ்டிரா பல துறைகளில் முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறினார்.
“இன்று, உத்தவ் தாக்கரே 370-வது பிரிவை ரத்து செய்தல், அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் வக்பு வாரியம் தொடர்பான சட்டத்தை கடுமையாக எதிர்த்த கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளதாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேவைக் கேட்க விரும்புகிறேன், வீர் சாவர்க்கரைப் பற்றி சில நல்ல வார்த்தைகளைப் பேசுமாறு ராகுல் காந்தியிடம் நீங்கள் கேட்கப் போகிறீர்களா? பால் தாக்கரே பற்றி நன்றாக பேசுமாறு காங்கிரஸிடம் கேட்க முடியுமா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.