அரசு பள்ளிகளில் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் முறையாக வகுப்புகள் நடத்தப்படுகிறதா, உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது ஆகியவற்றை குறித்து மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்கு செல்லாமல் வேறு நபர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்திவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகார்கள் அதிகரித்துவந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் வேறு நபர்களை வைத்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் பற்றி முறையான தகவல்களை கொடுக்காத தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.